முன்னாள் கல்லுாரி மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
காஞ்சிபுரம்:செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் 1991 - 94ம் ஆண்டு வரை வேதியியல் துறையில் பயின்ற மாணவ- - மாணவியரின் 30வது ஆண்டு சந்திப்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.முன்னாள் மாணவர் திருநாவுக்கரசு வரவேற்றார். இதில், பங்கேற்ற முன்னாள் மாணவ - -மாணவியர், கல்லுாரியில் தாங்கள் பயிலும்போது நடந்த சுவாரசியமான சம்பவங்களையும், தங்களுக்கு பாடம் நடத்திய பேராசிரியர்களையும் நினைவு கூர்ந்தனர்.கல்லுாரி படிப்பிற்கு பின் தங்களது பணி விபரம், குடும்ப சூழல், சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இக்கல்லுாரியில் 2019ம் ஆண்டு முதல், 2024ம் ஆண்டு வரை வேதியியல் துறையில் படித்து தேர்வில் முதலிடம் பெற்ற பிரியதர்ஷினி, கோமதி, ரம்யா தேவி மாணவியர் மூவருக்கும், முன்னாள் மாணவர்கள் 10,000 ரூபாய் பரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் ஷெரிப் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.