உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

குன்றத்துார்:குன்றத்துாரை சேர்ந்தவர் ஈ.கோதண்டம், 99. இவர், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் 1989 மற்றும் 1996 தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வெற்றிபெற்றார். இவரது மகன் கோ.சத்தியமூர்த்தி, குன்றத்துார் நகராட்சி தலைவராக பதிவி வகித்து வருகிறார். குன்றத்துாரில் வசித்து வந்த கோதண்டம், வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி