மேலும் செய்திகள்
இறைச்சிக் கழிவுகளால் அவதி
17-Oct-2025
வாலாஜாபாத்: அவளூர் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் ஏற்பட்டு அச்சாலையில் செல்வோர் சிரமப்படுகின்றனர். வாலாஜாபாத் அடுத்த அவளூரில் இருந்து, இளையனார்வேலுார் செல்லும் புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் அவளூர் அடுத்த தம்மனுார் ஏரி அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் சாலை ஓரத்தில் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அவளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இறைச்சி கடை வைத்துள்ள வியாபாரிகள் இத்தகையை செயலில் ஈடுபவதாக கூறப்படுகிறது. இந்த இறைச்சி கழிவு களால் மழைக்காலங்களில் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அவளூர் - இளையனார்வேலுார் சாலையில் தம்மனுார் ஏரியையொட்டிய சாலையோர இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் கழிவுகள் கொட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
17-Oct-2025