விவசாயிகள் அட்டை பெற நான்கு நாட்கள் முகாம்
காஞ்சிபுரம்:விவசாயிகள் அடையாள அட்டை பெற நான்கு நாட்கள் முகாம் நடைபெற்று வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் வேளாண் துறையினர் இணைந்து, ஜூலை- 9ம் தேதி முதல், நாளை வரையில், விவசாயிகளுக்கு அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம், அந்தந்த ஊராட்சிகளில் நடத்தி வருகின்றனர்.நேற்று, இரண்டாவது நாளில் ஒழுக்கோல்பட்டு, திருப்புட்குழி, தேவரியம்பாக்கம், காந்துார், மதுரமங்கலம் ஆகிய ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில், வருவாய் மற்றும் வேளாண் துறையினரிடம், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடையாள அட்டை பெற வேண்டும் என, பதிவு செய்துள்ளனர்.முகாம் நிறைவு பெறும் நாளில் எத்தனை விவசாயிகள் முழுமையாக பதிவு செய்துள்ளனர் என, முடிவுகள் அறிவிக்கப்படும் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.