உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை மையத்தடுப்பில் அடிக்கடி விபத்து ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை மையத்தடுப்பில் அடிக்கடி விபத்து ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, எறையூர் சாலை சந்திப்பில் உள்ள மையத்தடுப்பில் தொடர்ந்து விபத்து நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தஉள்ளனர். வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை --திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் சிங்பெருமாள் கோவில் சாலை, வாலாஜாபாத் -- பாலுார் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில், ஒரகடத்தில் இருந்து வண்டலுார் செல்லும் மார்கமாக, ஒரகடம் மேம்பாலம் அருகே, 500 மீட்டர் தொலைவில், வைப்பூர், எறையூர் செல்லும் சிப்காட் சாலை பிரிந்து செல்கிறது. இந்நிலையில், ஒரகடம் மேம்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், இந்த சந்திப்பில் உள்ள, சாலை மையத்தடுப்பில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறியதாவது: இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள், ஒரகடம் மேம்பாலத்தை கடந்து, வண்டலுார் நோக்கி செல்லும் போது, இந்த சந்திப்பில் சாலை மையத்தடுப்பு துவங்குகிறது. எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் மரண பீதியில் செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த இடத்தில் மின் விளக்கு இல்லாதால், இருசக்கர வாகன ஓட்டிகள், மையத்தடுப்பின் மீது ஏறி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, மையத்தடுப்பு துவங்குவதை அறிவுறுத்தும் வகையில், எச்சரிக்கை பலகை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை