காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கந்தசஷ்டி பாராயணம்
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன், ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிருஷ்ணா யஜூர் வேத மூல நித்ய பாராயண டிரஸ்ட் சார்பில், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனம் முன், 45ம் ஆண்டு, கந்த சஷ்டி உற்சவ வேத பாராயணம் கடந்த 2ம் தேதி துவங்கியது.மூன்றாம் நாளான நேற்று காலை 8:00 - 11:30, மாலை 3:00 - -5:30 மணி, மாலை 6:00 முதல் -இரவு 8:00 வரை என, மூன்று வேளையும் பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர்.இதில், ஆனந்த கணபாடிகள் தலைமையில், 55 வேத பண்டிதர்கள் பங்கேற்று பாராயணம் செய்து வருகின்றனர். வரும் 7ம் தேதி வேத பாராயணம் நிறைவு பெறுகிறது.