உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புளியம்பாக்கம் சாலையோரம் குவியும் குப்பையால் சீர்கேடு

புளியம்பாக்கம் சாலையோரம் குவியும் குப்பையால் சீர்கேடு

வாலாஜாபாத்:புளியம்பாக்கம் சாலை ஓரத்தில் குப்பை குவியாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் வாலாஜாபாத் அடுத்து புளியம்பாக்கம் உள்ளது. புளியம்பாக்கம் சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, வாகனங்கள் மூலம் ஏராளமானோர் இரவு, பகலாக பயணிக்கின்றனர். இச்சாலை ஓரங்களில் புளியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே ஏராளமான குப்பை குவிந்துள்ளது. இதனால் , மழைக்காலங்களில் துர்நாற்றம் ஏற்பட்டு இச்சாலை வழி யாக செல்பவர்கள், மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பை கொட்டுவதை தடுப்பதோடு, அங்கு குவிந்துள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை