உள்ளூர் செய்திகள்

வரும் 10ல் கருடசேவை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி, சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 10ம் தேதி வைகுண்டஏகாதசி உற்சவம் நடக்கிறது. இதில், அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் காட்சியும், தொடர்ந்து கருடசேவை உற்சவமும் விமரிசையாக நடக்கிறது.கருட வாகனத்தில் எழுந்தருளும் வேணுகோபால சுவாமி, முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.உற்சவத்தையொட்டி வரும் 9ம் தேதி இரவு முழுதும், ஹரிபஜனை, திவ்ய பிரபந்தம், கீர்த்தனைகளுடன் பஜனைநடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி