உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பட்டியலின மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி

பட்டியலின மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி

காஞ்சிபுரம்:பட்டியலின மாணவர்களுக்கு, 'தாட்கோ' மூலம், ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார் இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் எனப்படும் தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., நர்சிங், பொது நர்சிங் மற்றும் மருத்துவ டிப்ளமா ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 21 - 35 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதமும், விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணைய தளம் www.tahdco.comஎன்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை