மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
20 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
20 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
20 hour(s) ago
காஞ்சிபுரம், தமிழ்நாடு பென்சிங் அசோசியேஷன் மற்றும் காஞ்சி மாவட்ட பென்சிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான, 'பென்சிங்' எனப்படும் வாள்வீச்சு போட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பக்தவத்சலம் தொழில்நுட்ப கல்லுாரியில், கடந்த இரு நாட்களாக நடந்தது.மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.இறுதிப் போட்டியில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் முதலிடம் பெற்று, தங்க பதக்கம் வென்றனர். இதன் வாயிலாக இம்மாணவர்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோலில், இம்மாதம் இறுதியில் நடைபெறும் தேசிய அளவிலான வாள்வீச்சு போட்டியில் பங்கேற்கின்றனர். நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடமும், சென்னை மாவட்டம் மூன்றாமிடமும் பெற்றன. விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் தலைவர் விவேகானந்தன், போட்டி அமைப்பாளர் குழு மலர்வண்ணன், செயலர் முருகேசன், ஆலோசகர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago