உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சிங்கபெருமாள் கோவில் - பூஞ்சேரி ரூ.2,700 கோடியில் 10 வழி சாலை டெண்டர் கோரியது அரசு

 சிங்கபெருமாள் கோவில் - பூஞ்சேரி ரூ.2,700 கோடியில் 10 வழி சாலை டெண்டர் கோரியது அரசு

சென்னை: சிங்கபெருமாள் கோவில் - பூஞ்சேரி இடையில், 2,700 கோடி ரூபாய் மதிப்பில், 10 வழிச்சாலை அமைப்பதற்கான ஒப்பந்ததாரர் தேர்வை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் துவங்கியுள்ளது. எண்ணுார் அருகே காட்டுபள்ளி துறைமுகம் முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வரை, 132 கி.மீ.,க்கு எல்லைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இரண்டு பக்கமும் இரு வழி அணுகு சாலையுடன், 10 வழிச்சாலையாக இது அமை க்கப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஐந்து கட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. காட்டுபள்ளி - தச்சூர் கூட்டுச்சாலை; தச்சூர் - திருவள்ளூர்; திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெ ரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் - பூஞ்சேரி என, ஐந்து கட்டங்களாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மூ ன்று கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் இடையிலான பகுதியில், ஏற்கனவே ஒரகடம் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஐந்தாம் கட்டமாக சிங்கபெருமாள் கோவில் - பூஞ்சேரி இடையிலான, 27 கி.மீ., சாலை பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதற்காக, 2,700 கோடி ரூபாய்க்கு ஒப்பந்ததாரர் தேர்வு துவங்கியுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வு முடிந்து, 45 நாட்களில் பணிகளை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான நிதி உதவியை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம், தமிழக அ ரசு கேட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ