உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கன்வாடி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

அங்கன்வாடி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

காஞ்சிபுரம்:தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தேவரியம்பாக்கம் மற்றும் தோணாங்குளம் கிராமங்களைச் சேர்ந்த அங்கன்வாடி மையங்களில், முன் பருவ கல்வி நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடந்தது.இந்த விழாவிற்கு, தேவரியம்பாக்கம் அங்கன்வாடி மையப் பொறுப்பாளர் சரஸ்வதி தலைமை வகித்தார்.தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முன் பருவ கல்வி முடித்த குழந்தைகளுக்கு பட்டமளித்து கவுரவித்தார்.இதில், தோணாங்குளம் அங்கன்வாடி மையப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குழந்தைகளின் பெற்றோர், தனியார் பள்ளி மாணவர்களை போல பட்டமளிப்பு உடையை அணிவித்து அசத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி