உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரி மதகு கட்டுமான பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

ஏரி மதகு கட்டுமான பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:வளத்தாஞ்சேரியில், ஏரி மதகு கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், சாலையில் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில் இருந்து, வளத்தாஞ்சேரி, கண்ணந்தாங்கல் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வளத்தாஞ்சேரி ஏரி மதகு சேதமடைந்ததை அடுத்து, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மதகு கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், வளத்தாஞ்சேரி சாலையில் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லி கற்கள் மீது செல்லும் போது, இடறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அப்பகுதியில் நிலைத் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி