உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் குறைதீர் கூட்டம் 441 பேரின் மனுக்கள் ஏற்பு

காஞ்சியில் குறைதீர் கூட்டம் 441 பேரின் மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், பட்டா, ரேஷன் அட்டை, வேலைவாய்ப்பு, உதவித்தொகை என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 441 பேர் மனு அளித்தனர்.மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மத நல்லிணக்கத்திற்கான தேசிய அறக்கட்டளைக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியை, கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

கல்குவாரியை எதிர்த்து மனு

உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட, மாம்புதுார் கிராமத்தில் கல்குவாரி அமைக்க, தனிநபர் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். எங்கள் கிராமத்தில் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் வளர்க்கப்பட்ட மரங்களையும், ஏரி பாசன கால்வாயையும் சேதப்படுத்தி கல்குவாரி அமைக்க முயற்சி நடக்கிறது.எங்கள் கிராமத்தில் கல்குவாரி அமைத்தே தீருவேன் என, குவாரி நடத்த முயற்சிப்போர் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். பாசன கால்வாய்களை சேதப்படுத்துகின்றனர்.கல்குவாரி அமைந்தால், 100 ஏக்கரில் எங்கள் கிராமத்தில் நடக்கும் விவசாயம் பாதிக்கும். எனவே, கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது, என, மனு அளித்தனர்.

புறக்கணிப்பதாக புகார்

குடமுழுக்கு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர்களை புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட கூத்திரம்பாக்கம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆதிதிராவிட மக்களுக்கு வழிபாடு உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது.இது தொடர்பாக, 35 ஆண்டுகளாக அமைதி பேச்சு நடத்தி, தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். முத்துமாரியம்மன் கோவில், கடந்தாண்டு புதிதாக கட்டப்பட்டு வந்தபோது, ஆதிதிராவிட மக்களிடமும் தலக்கட்டு வாங்க வேண்டும் என, கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சில் முடிவு செய்யப்பட்டது.ஆனால், ஆதிதிராவிட மக்களிடம் எந்தவித தகவலும் கூறாமல், அழைப்பும் இல்லாமல், குடமுழுக்கு பணிகள் நடப்பதை கேட்டு, நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.குடமுழுக்கு நிகழ்ச்சியில், ஆதிதிராவிட மக்கள் பங்கெடுக்க உரிமை வழங்க ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ