மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
06-Aug-2025
உத்திரமேரூர், காரணிமண்டபம் கன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், காரணிமண்டபம் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி மாத கூழ்வார்த்தல் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், 11:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து, அம்மனுக்கு கூழ்வார்த்து வேண்டுதல் செய்தனர்.
06-Aug-2025