குட்கா விற்றவர் கைது
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, சுண்ணாம்புகார தெருவில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் சோதனை செய்தனர். விநாயகம், 40, என்பவரின் கடையில் குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. 300 கிராம் ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் விநாயகத்தை, உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.