மேலும் செய்திகள்
குட்கா விற்ற வாலிபர் கைது
23-Jun-2025
உத்திரமேரூர்,:சோழனுாரில் பெட்டிக்கடையில் சோதனை செய்த போலீசார் குட்காவை பறிமுதல் செய்து, உரிமையாளரை கைது செய்தனர்.உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சோழனுார், காவனுார் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சோழனுார் கிராமத்தில் மேட்டு தெருவில் உள்ள, பெட்டிக்கடை ஒன்றில் போலீசார் சந்தேகத்தின்படி, சோதனை செய்தனர்.அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ குட்கா பொருட்கள், விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, ஒரு கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார், கடையின் உரிமையாளரான நடராஜன், 62; என்பவரை கைது செய்தனர்.
23-Jun-2025