உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொங்கிய சிசிடிவி கேமரா குற்றங்க ள் கண்ட றிவதில் சிக்கல்

தொங்கிய சிசிடிவி கேமரா குற்றங்க ள் கண்ட றிவதில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமரா சேதமடைந்து தலை தொங்கிய நிலையில் உள்ளதால், அப்பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையிலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகை சந்திப்பில், ஒரகடம் போலீசாரால் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதில், இரண்டு கேமராக்கள் தலை சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், இப்பகுதியில் எதேனும் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் தலை சாய்ந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி