உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல்லுாரி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு

கல்லுாரி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், புகையிலை பயன்பாடு, புற்றுநோய், டெங்கு, தொழுநோய், வாய் சுகாதாரம் குறித்து சுகாதார துறை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார்.இதில், சமூகவியலாளர் கோமதி, சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி, நலக் கல்வியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் புகையிலை பயன்பாடு, போதை ஒழிப்பு, டெங்கு, தொழுநோய் குறித்து மாணவ- - மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து, மாணவ- - மாணவியர் புகையிலைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை