வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவனுகளுக்கு சப்போட் செய்யும் ஜாக் டோ ஜியோ
குடிநீர் வியாபாரம் செய்யிறதுக்கு அரசாங்கத்துக்கிட்ட நோ அப்ஜெக்சன் வாங்கணும் .... இதை ஒரு நடைமுறையா வெச்சதே ஊழலுக்காகத்தான் .... இது போல பல நடைமுறைகள் ....
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், குடிநீர் வியாபாரம் செய்ய, தடையில்லாத சான்று கேட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் விண்ணப்பித்திருந்தார்.வியாபாரத்திற்கு தடையில்லாத சான்று வழங்குவதற்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், 58. என்பவரை, நேரில் அணுகி உள்ளார்.அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டு, சரவணனிடம் பேரம் பேசி உள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாததால் சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சரவணனிடம் 5,000 ரூபாய்க்கு ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர்.நேற்று மாலை, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், லஞ்ச பணம் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இவனுகளுக்கு சப்போட் செய்யும் ஜாக் டோ ஜியோ
குடிநீர் வியாபாரம் செய்யிறதுக்கு அரசாங்கத்துக்கிட்ட நோ அப்ஜெக்சன் வாங்கணும் .... இதை ஒரு நடைமுறையா வெச்சதே ஊழலுக்காகத்தான் .... இது போல பல நடைமுறைகள் ....