உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் பால் குளிரூட்டும் நிலைய கழிவுநீர் திறந்தவெளியில் விடுவதால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர் பால் குளிரூட்டும் நிலைய கழிவுநீர் திறந்தவெளியில் விடுவதால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர்: அரசு பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து, திறந்தவெளியில் விடப்படும் கழிவுநீரால், -உத்திரமேரூரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. உத்திரமேரூர் பேரூராட்சி, 4வது -வார்டில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, அரசு கூட்டுறவு பால் குளிரூட்டும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கி ராமங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதை குளிரூட்டி, காக்களூர் அரசு ஆவின் பால் தொழிற் சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு கொள்முதல் செய்யப்படும் பாலை குளிரூட்டும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை சேகரிப்பதற்கான தொட்டி இல்லை. இதனால், கழிவு நீரானது குளிரூட்டும் நிலையத்தின் பின்புறத்தில் உள்ள திறந்தவெளியில் விடப்படுகிறது. கழிவுநீர் அங்கேயே குளம்போல் தேங்குவதால், கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, திறந்தவெளியில் பால் கழிவுநீர் விடுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ