உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  குடிநீர் தொட்டி அருகே கொட்டப்பட்ட மாத்திரை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

 குடிநீர் தொட்டி அருகே கொட்டப்பட்ட மாத்திரை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்: கொட்டவாக்கத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கொட்டப்பட்டுள்ள மாத்திரைக் கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கம் கிராமத்தில், அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி வாயிலாக நீரேற்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும், கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, முறையாக பராமரிக்காததால், அதன் அருகே நாணல் புல் வளர்ந்துள்ளது. மேலும், அப்பகுதியை சேர்ந்த, பழைய பேப்பர், பயன்பாடில்லாத பொருட்களை வாங்கும், 'காயலான் கடை' வியாபாரிகள் சிலர், இரும்பு கழிவு, மாத்திரை கழிவுகளை, குடிநீர் தொட்டி அருகே கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குடிநீர் மாசடைவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி கொட்டப்பட்டுள்ள மாத்திரைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை