உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:வடிகால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் உள்ள கால்வாயில் தேங்கி வருவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சி, காஞ்சிவாக்கம் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, காஞ்சிவாக்கம் பிரதான சாலையோரம் வடிகால்வாய் வசதி இல்லாததால், அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரம் திறந்தநிலை கால்வாயில் தேங்குகிறது. குளம் போல் தேங்கியுள்ள சாக்கடை மற்றும் கழிவுநீரில் பன்றிகள் உருண்டு புரளுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப் பகுதியினர் உள்ளனர். எனவே, கழிவுநீர் தேங்காதவாறு, வடிகால் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி