மேலும் செய்திகள்
திடீர் கோடை மழையால் குளமாக மாறிய சாலை
17-Apr-2025
காஞ்சிபுரம்:சித்திரை மாதத்தில் இறுதியாக நாட்களும், வைகாசி மாத துவக்கத்தின் சில நாட்கள் என, அக்னி நட்சத்திரம் என, அழைக்கப்படும் கத்திரி வெயில் அடிக்கும்.இந்த வெயிலின் உக்கிரம் அதிகமாக போது, ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லாது. மனிதர்கள் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும். நேற்று கத்திரி வெயில் துவக்க நாளாளில், கிராமப்புற மக்களை வருணபகவான் குளிர்வித்து சென்று உள்ளார்.நேற்று, மாலை 4:00 மணி அளவில் புழுதியுடன் காற்று அடிக்க துவங்கியது. அரை மணி நேரத்திற்கு பின், வட மேற்கு பகுதியில் வானம் இருட்ட துவங்கியது. அதன் பின், லேசான மழையுடன் துவங்கி ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளும், மழையை பொருட்படுத்தாமல் புல்லை மேய்ந்துக்கொண்டிருந்தது.கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலை நேரத்தில் உக்ரகத்தை மழை தணித்திருப்பது கிராம மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.பூந்தமல்லி, குன்றத்துாரில்குன்றத்துார், பூந்தமல்லியில், நேற்று, கோடை வெயில், சுட்டெரிந்த நிலையில், மாலை 3:30 மணி அளவில் கருமேகம் சூழ்ந்து திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது.இதனால், சாலையில் புழுதி பறந்தது. சாலையில் நடந்து சென்ற மக்கள், நடைபாதை வியாபாரிகள், இருசக்கரா வாகன ஓட்டிகள் புழுதியுடன் வீசிய காற்றால் திணறினர்.அதன்பின் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
17-Apr-2025