உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் வாகன பார்க்கிங் உத்திரமேரூரில் கடும் நெரிசல்

சாலையோரம் வாகன பார்க்கிங் உத்திரமேரூரில் கடும் நெரிசல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, செங்கல்பட்டு சாலை, எண்டத்தூர் ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், உத்திரமேரூரில் உள்ள கடைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வருவோர், தங்களுடைய வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.மேலும், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை ஏற்றிச் செல்லும் லாரிகள், தொடர்ந்து நகருக்குள் வருவதால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல், நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.எனவே, உத்திரமேரூரில் உள்ள முக்கிய சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை