உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  போக்குவரத்திற்கு இடையூறு போல்ட் நட் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றம்

 போக்குவரத்திற்கு இடையூறு போல்ட் நட் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றம்

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில், வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த போல்ட் நட்டை' நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர். காஞ்சிபுரத்தில், காந்தி சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், மூன்று வழிப்பாதையாக மாற்றப்பட்டு, மைய தடுப்புக்காக உருளை வடிவ பைபர் ஸ்டிக்' தரையில் பொருத்தப்பட்டுள்ளது. இச்சா லையில் சென்ற வாகனங்கள் மோதியதில், தரையில் பொருத்தப்பட்டுள்ள, போல்ட் நட்டில்' இருந்து பைபர் ஸ்டிக்' கழன்று மாயமாகியுள்ளளது. இதனால், தடுப்பு இல்லாத பகுதியில் செல்லும் வாகனங்களின் டயர்கள், போல்ட் நட்டுகள்' மூலம் பஞ்சர் ஆகிறது. மேலும் தடுப்பு இல்லாத இடைவெளியில் விதியை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே, காந்தி சாலையில், மைய தடுப்பில் காலியாக உள்ள இடங்களில் மீண்டும் பைபர் ஸ்டிக்' பொருத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, .காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், காந்தி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த போல்ட் நட்டுகளை நேற்று காலையில் அகற்றி, அப்பகுதியில் இரும்பு தடுப்புகளை அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ