உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்பாதைக்காக சேதமான சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை

மின்பாதைக்காக சேதமான சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், புதைவட மின்பாதைக்காக மின்வாரியத்தினரால், பள்ளம் தோண்டப்பட்ட 11 இடங்களில் சேதமான சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் சார்பில், சி.எஸ்.செட்டித் தெரு, சி.வி.ராஜகோபால் தெரு, காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் சாலை, கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட சாலைகளில், 11 இடங்களில் உயர் மின்னழுத்த புதைவட மின்பாதைக்காக நிலத்தடியில், 10 நாட்களுக்கு முன் சாலையின் குறுக்கே கேபிள் பதிக்க பள்ளம் தோண்டினர்.ஆனால், பணி முடிந்தபின், பள்ளம் தோண்டிய இடத்தை முறையாக தார் கலவையால் சீரமைக்கவில்லை. இந்நிலையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, மின்வாரியத்தினரால் 11 இடங்களில் சேதமான சாலையை, காஞ்சிபுரம் உபகோட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், தார் கலவை வாயிலாக நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ