மேலும் செய்திகள்
அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு திருமணம்
22-Oct-2024
காஞ்சிபுரம்:புதிய பணியிடம் ஏற்படுத்ததுல், பதவி உயர்வுடன், விருப்பத்தின் பேரிலான பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நவ., 13 முதல், 19 வரை ஒரு வாரத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.அதன்படி. மாநிலம் முழுதும் ஹிந்து சமய அறநிலையத் துறையில் கண்காணிப்பாளர், ஆய்வாளர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் என, அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
22-Oct-2024