உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரு கிராமங்களுக்கு குடிநீர் ஹூண்டாய் நிறுவனம் உதவி

இரு கிராமங்களுக்கு குடிநீர் ஹூண்டாய் நிறுவனம் உதவி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார், கடுவஞ்சேரி கிராமங்களுக்கு, குடிநீர் கட்டமைப்பு வசதிகளை, 'ஹூண்டாய் மோட்டார்' நிறுவனத்தின், தனியார் சமூக பங்களிப்பு பிரிவு செய்து கொடுத்துள்ளது.இந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 1.60 கோடி ரூபாய் செலவில், இரு 90,000 லிட்டர் குடிநீர் தொட்டிகள், குடிநீர் குழாய்கள், பம்ப் அறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இதனால், இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், 5,200 பேர் பலன் அடைந்துள்ளனர்.இது தவிர, பென்னலுார் கிராமத்திற்கு, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, கழிப்பறை கட்டமைப்பு, மாணவர்களுக்கு டியூஷன் வசதி, இளம் பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு திட்டங்கள் ஆகியவை, ஏற்கனவே செய்து தரப்பட்டுள்ளன. கடுவஞ்சேரி அரசு பள்ளி சீரமைப்பு, வெள்ள நிவாரண பணிகள் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை