உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு

அரசு பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில், பழுதான கட்டடங்களிலும், இட நெருக்கடியிலும் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் குறித்து கடந்த ஆண்டுகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டன.அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பள்ளிகளுக்கு குழந்தைகள் நேய உட் கட்டமைப்பு திட்டத்தின் கீழ், கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட புதிய கட்டடங்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தன.பணிகள் நிறைவு பெற்ற பள்ளிகளுக்கான திறப்பு விழா நேற்று நடந்தது.அதன்படி, சிறுதாமூர், ஆனம்பாக்கம், குண்ணவாக்கம் மற்றும் காவிதண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட காவூர் ஆகிய பகுதிகளில், 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டிய 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டடங்கள் பணி முடிந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று பள்ளிக்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் மற்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை