வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Thank you, Collector, for emphasizing the importance of Udyam registration in empowering industrial companies and promoting MSME growth.
காஞ்சிபுரம்:குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.இயந்திர தளவாடங்கள் மீதான முதலீடு 1 கோடி ரூபாய்க்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் 5 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் அது குறு நிறுவனம். முதலீடு 10 கோடி ரூபாய்க்கு மிகாமலும், விற்பனை வருவாய் 50 கோடி ரூபாய்க்கு மிகாமலும் இருந்தால், அது சிறு நிறுவனம்.அதுவே, முதலீடு 50 கோடிக்கு மிகாமலும், வருவாய் 250 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது நடுத்தரத் தொழில் நிறுவனமாகும். இந்த தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் வாயிலாக, நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.உற்பத்தி, வணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் udyamregistration.gov.inஎன்ற இணையதளத்தின் வழியே எளிதாக, தாமாகவே கட்டணம் ஏதுமின்றி உத்யம் பதிவுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறவும், அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன் பெறவும், உத்யம் பதிவுச் சான்றிதழ் அவசியமான ஒன்றாகிறது.மாவட்ட தொழில் மையத்தை நேரடியாக அணுகினால், உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறும் நடைமுறை தெளிவாக விளக்கப்படும்.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசின் பல்வேறு பயன்களை பெற, உத்யம் பதிவுச் சான்றிதழ் பதிவு செய்து கொள்ளுமாறு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
Thank you, Collector, for emphasizing the importance of Udyam registration in empowering industrial companies and promoting MSME growth.