மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
15 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
15 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
15 hour(s) ago
வாலாஜாபாத், :வாலாஜாபாத் பேரூராட்சியில் 20,௦௦௦க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், வாலாஜாபாத் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, ஒரகடம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.எனினும், பூந்தமல்லி செல்ல நேரடி போக்குவரத்து வசதி இல்லை. இதனால், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், சுங்குவார்சத்திரம் அல்லது ஒரகடம் சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து, பூந்தமல்லி செல்கின்றனர்.இதனால், கூடுதல் நேரமாவதோடு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல இயலாத நிலை உள்ளது.எனவே, வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் மாநகர பேருந்து சேவையை பூந்தமல்லி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago