உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் அத்துமீறும் லாரிகள் நேர கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்

வாலாஜாபாதில் அத்துமீறும் லாரிகள் நேர கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் வியாபாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், வாலாஜாபாதில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகரன் பங்கேற்று, வாலாஜாபாத் கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை கடைக்கு முன்பான சாலையோரம் நிறுத்துவதை தவிர்க்கவும், கடைகள் முன்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, விபத்துக்களை தவிர்க்க உதவியாக இருக்கும் என காவல் ஆய்வாளர் பிரபாகரன் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய, வாலாஜாபாத் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வாலாஜாபாத் நகர் பகுதியில், காலை மற்றும் மாலை நேரங்களில் லாரி மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும், வாலாஜாபாத் சாலையில் குறிப்பிட்ட துார இடைவெளியில் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்