சேதமடைந்த நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்தட பாதைக்கான மின்கம்பங்கள் சாலையோர நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளன.இதில், ஒரு மின்கம்பம் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் இருந்தது. சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, சேதமடைந்த மின்கம்பத்திகு மாற்றாக, மின்வாரியம் சார்பில், அதன் அருகிலேயே புதிதாக மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.மின்கம்பம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டதால், நடைபாதை சேதமடைந்துள்ளது. இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.