மேலும் செய்திகள்
ஹாசனாம்பாவை தரிசிக்க பக்தர்கள் வருகை அதிகரிப்பு
28-Oct-2024
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், செவிலிமேட்டில் உள்ள ராமானுஜர் சன்னிதி, காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாதந்தோறும் நடைபெறும் திருவாதிரை திருமஞ்சனத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலுக்கு, வரதராஜ பெருமாள் கோவில் சார்பில், தினமும் நித்ய பூஜை நடத்த ஏற்பாடு செய்யவில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், பக்தர்கள் சிலர் தங்களது சொந்த செலவில் நித்ய பூஜை செய்து வருகின்றனர். பூஜை முடிந்ததும் கோவில் பூட்டப்படுவதால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.எனவே, செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில், தினமும் நித்ய பூஜை நடத்தவும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
28-Oct-2024