உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் துார்வார வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் துார்வார வலியுறுத்தல்

கருப்படிதட்டடை,: காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில் ரேஷன் கடை அருகில் உள்ள சிறுபாலம் வழியாக செல்லும் மழைநீர் வடிகால்வாயில், செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரிசீரமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை