உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு நத்தப்பேட்டை, தென்னந்தோப்பு பின்பக்கம் உள்ள பாலாமணி நகரில் உள்ள வீடுகளுக்கும், தெரு மின்விளக்கு வெளிச்சத்திற்காகவும் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், ஒரு மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்தால் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் சேதமடைந்த ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, நத்தப்பேட்டையினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி