உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர் மண்டிய வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

புதர் மண்டிய வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அருகில் உள்ள கோகுலம் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், சாலையோரம் மாநகராட்சி சார்பில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண்டியுள்ள மண் திட்டுகளில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.இதனால், மழை காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, கோகுலம் தெருவில் மழைநீர் வடிகால்வாயில் மண்டியுள்ள செடி, கொடிகளை முழுமையாக அகற்றி, கால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ