திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
காஞ்சிபுரம்:தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பள்ளி மாணவ- - மாணவியருக்கு, தலா, 15,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டில், இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும்.இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம்.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அக்.,31க்குள் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், நேரில் அளிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.