உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நேற்று நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று, முகாமில் பங்கேற்ற 40 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு புதுப்பித்த அடையாள அட்டையை வழங்கினார்.தொடர்ந்து, பால்நல்லுார் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல வீடுகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி