உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ஜெயேந்திரர் ஜெயந்தி விழா வரும் 10, 11ல் தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு

காஞ்சியில் ஜெயேந்திரர் ஜெயந்தி விழா வரும் 10, 11ல் தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு

காஞ்சிபுரம்:காஞ்சி சங்கரமடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திரர் ஜெயந்தி விழா, தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு மற்றும் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை துவக்க விழா வரும், 10, 11 ஆகிய இரு நாட்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது என, சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் கூறினார். காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் கூறியதாவது: வரும் 10ம் தேதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, ஒரு கோடி ரூபாய் நிதி ஆதாரத்துடன் 'ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி தெய்வத்தமிழ் ஆய்விருக்கை' என்ற பெயரில் அறக்கட்டளை துவக்க விழா நடக்கிறது. மேலும், தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு நடைபெற உள்ளது. இதில், 10ம் தேதி நிகழ்ச்சி சங்கரா கல்லுாரியிலும், 11ம் தேதி நிகழ்ச்சி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி துவக்க விழாவில், ரத்னகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை ஆதீனம் ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். நிறைவு விழாவில், திருப்பதியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சிபுரம் மடாதிபதிகள் சங்கர விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்று ஆசியுரை வழங்க உள்ளனர். ஆடிட்டர் குருமூர்த்தி, சாஸ்தரா பல்கலை இயக்குநரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக விழா அழைப்பிதழை கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் வெளியிட, தமிழ் துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய மாணவர் படை அலுவலர் ச.தெய்வசிகாமணி ஆகியோர் பெற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ