மழைநீர் கால்வாய் அமைக்க ஜெ.ஜெ., நகரினர் கோரிக்கை
செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு விவேகானந்தா பள்ளி எதிரில் உள்ள ஜெ.ஜெ., நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காலி மனையில் தேங்கும் மழைநீர் சாலையின் குறுக்கே வழிந்தோடுகிறது.இதனால், மண் அரிக்கப்பட்டு, சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இச்சாலையை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, செவிலிமேடு ஜெ.ஜெ., நகரில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.