உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி

மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி

காஞ்சிபுரம்: அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், ஆசிரியர்களுக்கு, 'ஜாலி போனிக்ஸ் ரெப்ரஷ்மென்ட் அண்ட் ஜாலி கிராமர்' என்ற பெயரில், மூன்று நாள் சிறப்பு பயிற்சி காஞ்சிபுரத்தில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆரம்ப பள்ளி குழந்தை களுக்கு, செயற்கை ஒலியியல் மூலம், ஆங்கில எழுத்தறிவு கற்பிப்பதற்கு, வேடிக்கையான மற்றும் குழந்தைத்தனமான அணுகுமுறைதான், 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி முறை என அழைக்கப் படுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்த இப்பயிற்சி, தற்போது, 'ஜாலி பியூச்சர்ஸ்' என்ற தனியார் அமைப்பு மூலம், முதல் முறையாக அரசு பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அரசு பள்ளி ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் வழி பயிலும், அரசு பள்ளி குழந்தைகள், ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பை எளிமையாக கற்க முடியும். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கில கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, 'ஜாலி போனிக்ஸ் ரெப்ரஷ்மென்ட் அண்ட் ஜாலி கிராமர்' என்ற பெயரில், ஆங்கில கற்பித்தலை வலுப்படுத்த, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 75 ஆசிரியர்களுக்கு, மூன்று நாட்கள் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், மாவட்ட அளவில் மாநில கருத்தாளர் விஜயலட்சுமி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் பயிற்சி அளித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் பயிற்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன் வேல் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ