உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அடிப்படை வசதிகளின்றி காக்கநல்லுார் சுடுகாடு

அடிப்படை வசதிகளின்றி காக்கநல்லுார் சுடுகாடு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்டது காக்கநல்லூர் துணை கிராமம். இந்த கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, யாராவது இறந்தால் அவர்களை அங்குள்ள சுடுகாட்டில் எரிக்கின்றனர். ஆனால், தற்போது, சுடுகாட்டில் எரிமேடை வசதி இல்லாமல் உள்ளது.இதனால், மழை மற்றும் வெயில் நேரங்களில் இறந்தவர்களை திறந்த வெளியில் வைத்து எரிக்கும்போது, கிராமத்தினர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.தொடர்ந்து, சுடுகாட்டில் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்ய தேவையான தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதால், கிராமத்தினர் நீண்ட தூரம் நடந்து சென்று, தண்ணீர் எடுத்து வரவேண்டிய சூழல் உள்ளது.எனவே, காக்கநல்லூர் சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ