உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடை கூரையை சீரமைக்க களக்காட்டூர் மக்கள் எதிர்பார்ப்பு

நிழற்குடை கூரையை சீரமைக்க களக்காட்டூர் மக்கள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை, களக்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது. இங்கு, களக்காட்டூர், விச்சந்தாங்கல், காலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வரும் வரை, நிழற்குடையில் காத்திருந்து பயணித்து வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், நிழற்குடை கூரையின் உட்பகுதியில், கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர்.சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என, களக்காட்டூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ