உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காளீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

காளீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

சீட்டணஞ்சேரி: சீட்டணஞ்சேரி, காளீஸ்வரர் கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திரிபுர சிவகாம சுந்தரி சமேத காளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் அறங்காவலர் குழு நியமனம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது இக்கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்வதோடு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் அறங்காவலர் குழு நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவராக தினகரன், உறுப்பினர்களாக பொன்னுரங்கம், காமாட்சி, மணி, மதன்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை