உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி : திருப்பருத்திகுன்றத்தில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு

காஞ்சி புகார் பெட்டி : திருப்பருத்திகுன்றத்தில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு

காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம் ஊராட்சி மற்றும் ஒட்டியுள்ள விப்பேடு ஊராட்சி குண்டுகுளம் பகுதியில், 30க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. கூட்டமாக திரியும் பன்றிகள், சாலையோரம் கிடக்கும் குப்பையை கிளறுகின்றன.விவசாய நிலத்தில் நெற்பயிர்களையும், வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறி, பழச் செடிகளையும் நாசப்படுத்துகின்றன. சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் பன்றிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, திருப்பருத்திகுன்றம், குண்டுகுளம் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து, வனப்பகுதியில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.ஜானகிராமன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை