நெல் கொள்முதல் நிலையங்களுக்கு காத்திருக்கும் காஞ்சி விவசாயிகள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், 45,000 ஏக்கர் விளை நிலங்களில், நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.தற்போது, வாலாஜாபாத் வட்டாரத்தில், புள்ளலுார், பள்ளம்பாக்கம், கோவிந்தவாடி, பெரியகரும்பூர். காஞ்சிபுரம் வட்டாரத்தில், கூரம், ஆரியபெரும்பாக்கம், கீழம்பி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடைக்கு வந்துள்ளன. இந்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் தனியார் நெல் வியாபாரிகளிடம் கெஞ்சி வருகின்றனர்.ஒரு மூட்டை நெல், 1,200 ரூபாய் கேட்பதால், விவசாயிகள் நெல் விற்பனை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில், 1,800 ரூபாய் வரையில் நெல் விற்பனையாவதால், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.எனவே, அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க, சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் முன் வர வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்ததெந்த கிராமங்களில், நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது என, ஆய்வு செய்து, டிசம்பர் மாதம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.