உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி பொய்யாமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சி பொய்யாமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், பாண்டவதுாத பெருமாள் கோவில் சன்னிதி தெருவில், பொய்யாமுடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன.கும்பாபிஷகத்தையொட்டி, கடந்த 2ம் தேதி, மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஜோமம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம், காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.நேற்று, காலை 7:30 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, விநாயகர் விமானத்திற்கும், மூலஸ்தான விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.தொடர்ந்து மஹா அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு யஜமானர் உத்சவமும், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதரைனயும், இரவு 8:00 மணிக்கு மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய பொய்யாமுடி விநாயகர் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ