உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கராத்தே, யோகாசன போட்டி காஞ்சி குழுவினர் அபாரம்

கராத்தே, யோகாசன போட்டி காஞ்சி குழுவினர் அபாரம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி மற்றும் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நேற்று நடந்தன.பி.கே.எம்., பீனிக்ஸ் ஷட் ரீயோ கராத்தே பயிற்சியாளர் முரளி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் பள்ளிகள் துணை ஆய்வாளர் பாலச்சந்தர், காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போட்டிகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு கராத்தே போட்டியில், காஞ்சிபுரம் குழுவினர் முதலிடமும், திருப்பத்துார் குழுவினர் இரண்டாவது இடமும், கர்நாடகா குழுவினர் மூன்றாவது இடமும் பிடித்தனர்.அதேபோல், 17 வயதிற்குட்பட்ட பிரிவு கராத்தே போட்டியில், ராணிப்பேட்டை குழுவினர் முதலிடமும், சென்னைக்குழுவினர் இரண்டாமிடமும், வேலுார் குழுவினர் மூன்றாவது இடமும் பிடித்தனர்.இதையடுத்து, 19 வயதிற்குபட்ட பிரிவு கராத்தே போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவினர் முதலிடம், திருவண்ணாமலை மாவட்ட குழுவினர் இரண்டாவது இடம். காஞ்சிபுரம் மாவட்ட குழுவினர் மூன்றாவது இடம் பிடித்தனர். இவர்களுக்கு, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், நாயக்கன்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ